Anti Drug Awareness (11-08-2025)
தந்தை பெரியார் பிறந்த நாளான (17-09-2025) புதன்கிழமை சமூக நீதிநாள் உறுதிமொழி மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை எடுக்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
Dr.S.அனந்த செல்வம்
YRC Programme Officer
சிவகங்கை கல்லூரியில் சைபர் கிரைம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி (23-09-2025) Youth Red Cross
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை மற்றும் இளம் செஞ்சுருள் சார்பாக சைபர் கிரைம் பற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் அந்தோணி டேவிட் நாதன் தலைமையில் சிவகங்கை சைபர் கிரைம் ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்வை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. அனந்த செல்வம் ஏற்பாடு செய்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி நூலகர் முனைவர் வாஞ்சிநாதன் மற்றும் பொருளாதார துறை இணை பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் வந்திருந்தனர் இந்த நிகழ்ச்சியை பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் மாயமுருகன் தொகுத்து வழங்கினார். இறுதியாக திட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முப்பெரும் விழா
*இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் இணைந்து நடத்திய 1.அறிமுக விழா 2. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 3. பனைவிதை நடவு அகிய நிகழ்ச்சிகள் 11.12.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் YRC & RRC திட்ட அலுவலர் முனைவர் ச.அனந்த செல்வம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் (பொறுப்பு) முனைவர் V.பாலகிருஷ்ணன் தொதொடக்க உ ரையாற்றினார் கல்லூரியின் முதல்வர் S.அந்தோணி டேவிட்நாதன் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
சிவகங்கை மாவட்ட IRCS Chairman திரு.V. சுந்தரராமன் அவர்கள் தற்கொலை தடுப்பு பற்றிய செய்திகளை மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் P.சிவானந்தவேல் அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகளுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தார்கள்
சிவகங்கை மாவட்ட YRC அமைப்பாளர் முனைவர் H.பரிதா பேகம் அவர்கள் நேர்மறை சிந்தனைகளோடு வாழ வேண்டும் என்பதனை அனைவருக்கும் புரியும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
தற்கொலை தடுப்பு என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், ஓவிய போட்டியும் நடைபெற்றது.போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி சிறப்பித்தார்கள். போட்டிகளுக்கு நடுவர்களாக சிறப்பித்த பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட
முதல்வரின் பசுமை தோழர்
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இரா. ஆனந்த் நாகராஜ் அவர்கள் மாண மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கி, பனைவிதை நடவுபணியை
துவக்கி வைத்தார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை YRC & RRC திட்ட அலுவலர் முனைவர் ச.அனந்த செல்வம் அவர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment